08/12/2024
நாம ஒரு துக்கடைக்கு போகிறோம் வழக்கமாக செல்கின்ற கடைகளாக இருந்தாலும் நம் மனம் அதிக தள்ளுபடி உள்ள தளத்திற்கு தான் செல்வோம் அல்லது நாம் இருக்கும் தளத்தில் அதிக தள்ளுபடி அட்டை எங்கேனும் தொங்க விட பட்டால் சும்மாவாது அங்கே போய் பார்ப்போம் , தேவை இல்லாவிடினும் நம் மனம் வாங்க தூண்டும் காரணம் மீண்டும் இதே தள்ளுபடி கிடைக்குமா ஒரு கேள்வியை நமக்குள்ளே கேட்கும்
இதை ரெண்டாக பிரிக்கலாம்
ஒரு துணி 35% தள்ளுபடியில் கிணடைகின்றது இன்னொன்று 50% தள்ளுபடியில் கிடைக்கின்றது நாம் எதை வாங்குவோம் கண்டிப்பாக 50% தள்ளுபடியில் கிடைக்கும் துணியை தான்
இங்கே தான் நாம் பெரிய தவறு செய்கின்றோம்
இங்கே என்னுடைய அனுபவத்தை கூறுகின்றேன் எனக்கு Linen ரொம்ப பிடிக்கும் எப்போலாம் அதிக தள்ளுபடியில் விற்பனை ஆகின்றதோ அப்போ அந்த துணியை வாங்குவேன் காரணம் அதே துணியை தள்ளுபடி இல்லாமல் வாங்கி பயன் படுத்தி நன்றாக இருந்ததால் தள்ளுபடி என்பதை என்னை பொறுத்தவரை லாபம் தான்
ஆக பயன் படுத்தாத ஒரு Material அல்லது Brand வாங்குவதை விட நன்கு பயன்படுத்தி நமக்கு பிடித்த ஒரு Brand தள்ளுபடியில் கிடைத்தால் அது தள்ளுபடி குறைவாக இருந்தாலும் என்னுடைய தேர்வு 35% தான்
இதோடு இன்னொன்றையும் சேர்த்தே சொல்கிறேன்
நாம் பயன்படுத்தும் Brand விலை ₹ 4,000/- 35% தள்ளுபடி போக ₹2,600/-
நாம் பயன் படுத்தாத Material அல்லது Brand ₹ 1,000/- 50% தள்ளுபடி போக ₹500/-
இங்கேயும் நம் தேர்வு 500/- ரூபாய் துணி தான் , காரணம் பெருசா இல்ல ₹2,600/- க்கு ஒரு சட்டை வாங்குவதற்கு ₹500/- க்கு 5 சட்டை வாங்கலாம்னு நம் மனம் சொல்லும்
ஆனால் என் தேர்வு ₹2,600/- துணி தான் காரணம் முன்பே சொல்லிவிட்டேன்.
இதை அப்படியே பங்கு சந்தைக்கும் பொருத்தி பார்ப்போம்
ஒரு பங்கு 35% தள்ளுபடி இன்னொன்று 50% தள்ளுபடியில் வர்த்தகம் ஆகின்றது (Fall From 52 Week High)
இங்கே நம் தேர்வு என்னவாக இருக்கும் என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை
அதிக தள்ளுபடியும் குறைவான விலை உள்ள பங்குகளும் தான் காரணம் நம் மனம் அதிகமான Qty வைத்திருந்தால் தான் அதிக லாபம் கிடைக்கும் என்கின்ற மாயைக்குள் சிக்கி உள்ளது
புரியலுக்கு ஒரு பங்கின் விலை ₹ 2000 10 பங்கு வாங்கினா 20000 ஆகும் அதையே ₹ 200 விலை உள்ள பங்கை வாங்கினா 100 பங்கு வாங்கலாம்னு தோணும் , இனி இதை இப்படி யோசிங்க ஒரு நிறுவனத்தில் Qty விட எவ்வளவு ரூபாய் முதலீடு செய்கின்றோம் என்பதில் கவனம் செலுத்துங்கள்
அடுத்த சில மாதங்களில் ₹ 200 பங்கு விலை ஏறாமல் போகலாம், அதே ₹ 2000 விலை உள்ள பங்கு 500 விலை கூடினால் நமக்கு 5000 லாபம் கிடைக்கும் , ஆகையால் நம் கவனம் ஒரு நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்கின்றோம் என்பதில் தான் இருக்க வேண்டும்.
நமக்கு நன்கு பரிட்சயம் ஆன துறையில் ஒரு பங்கு நல்ல விலையில் 35% தள்ளுபடியில் கிடைக்கின்றது (கடந்த சில மாதத்தில் 35% வீழ்ச்சி)
அது வங்கி துறையில் பிரபலமான Indusind Bank தான் தற்போதைய விலை ₹ 990/-
இந்த வங்கியில் வரவு செலவு கணக்கு வைத்திருப்பவர்கள், இந்த வங்கியில் FD அல்லது அது போன்று ஏதேனும் டெபாசிட் செய்தவர்கள் , லாக்கர் வைத்திருப்பவர்கள், பர்சனல் அல்லது வீடு வாகன கடன் பெற்றவர்கள் கண்டிப்பாக முதலீடு செய்யவேண்டும் , உங்களால் இந்த வாங்கி லாபம் ஈட்டுகின்றது அதில் சரியான இடத்தில் முதலீடு செய்து லாபத்தை எடுப்பதே புத்திசாலி தானம்
வழக்கம் போல் காலில் சுடுதண்ணி ஊற்றி கொண்டு தையா தக்கா என்று குதிப்பவர்களுக்கு இந்த பதிவு இல்லை
பொறுத்திருந்து பார்ப்போம்
Art Of Investing